துலாம் ராசி அன்பர்களே, இன்று கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து சேரும். தாயாரின் உடல் நிலை சீராகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். வியாபாரத்தில் லாபம் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று தொழிலில் சிக்கல்கள் ஏதும் உருவாகாது என்றாலும், சின்ன, சின்ன வாக்குவாதங்கள் மட்டும் வந்து செல்லும்.
எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இருக்காது. வார்த்தைகளில் கொஞ்சம் நிதானமாகவே இருங்கள். பொறுமையாக மட்டும் தயவு செய்து இன்று நீங்கள் பேசுவது ரொம்ப நல்லது. கூடுமானவரை கோபத்தை மட்டும் கட்டுப் படுத்திக் கொள்ளுவது ரொம்ப நல்லது. இன்று வெளி இடத்திற்கு செல்லும் பொழுது பொருட்கள் மீது மட்டும் கவனம். வெளியூர் பயணம் ஓரளவு சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும்.
அலைச்சலை முற்றிலும் தவிர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை ரொம்ப சிறப்பாகவே இருக்கும். ஆனால் சரியான உணவை எடுத்துக் கொள்வதும் சரியான நேரத்திற்கு தூங்க செல்வது தான் ரொம்ப முக்கியமானதாக இருக்கிறது. இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவராத்திரி என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அனைத்து காரியங்களும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். அதுமட்டுமில்லாமல் முடிந்தால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறப்பை அடையக்கூடும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்