தமிழக டிஜிபி அலுவலகத்தில் வனவேங்கைகள் கட்சியின் தலைவர் இரணியன் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், தான் குறவர் சமூகத்திற்கு தமிழக அரசிடம் சமூகப் பிரதிநிதித்துவம் வேண்டி உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகிறேன். இது குறித்து மனு ஒன்றை கொடுக்க கடந்த 23ஆம் தேதி சென்னையில் உள்ள அமைச்சர் கே..கே.எஸ்.எஸ் ரவிச்சந்திரன் வீட்டிற்கு வந்தேன்.
அங்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரனை சந்தித்தபோது தங்களை நாற்காலியில் அமர வைக்காமலும், தங்கள் ஒருமையில் பேசினார். மேலும் தான் அமைச்சரை நெருங்கி மனுவின் சாரம்சத்தை கூற முயன்ற போது தள்ளியை நின்று பேசு என தீண்டாமை செயலில் ஈடுபட்டார். எனவே தங்களின் சாதியை காரணம் காட்டி தீண்டாமை செயலில் ஈடுபட்ட கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.