இடைநிலை ஆசிரியர்களுக்கு பணப் பலன் வழங்காதது தொடர்பான வழக்கில் பள்ளி கல்வித்துறை ஆணையர் நேரில் உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் 1993 அரசாணையின்படி பண பலன்களை வழங்க உயர்நீதிமன்ற குழு உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவுபடி பணப்பலன் வழங்கவில்லை என ஆசிரியர் ஹரிகரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணப் பலன் வழங்காதது தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஆணையரை நேரில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. பலமுறை அவகாசம் அளித்தும் விளக்கம் அளிக்காததால் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற உத்தரவை பிறப்பித்து இருக்கிறது