கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. அதில் பிரபல யூடியூபர் டி.டி.எப் வாசன் என்பவர் மற்றொரு யூடியூபரான ஜி.பி.முத்துவை தனது மோட்டார் சைக்கிளில் அமர வைத்து 150 கி.மீ வேகத்தில் ஓட்டி சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போத்தனூர் மற்றும் சூலூர் காவல் நிலையங்களில் டி.டி.எப் வாசன் மீது தலா இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலை 10:30 மணிக்கு டி.டி.எப் வாசல் மதுக்கரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பு சரணடைந்துள்ளார். இதனை அடுத்து மாலை 5.30 மணி வரை நீதிமன்ற கூண்டில் அமர்ந்திருந்த டி.டி.எப் வாசனுக்கு இரண்டு நபர்கள் உத்தரவாதம் அளித்த பிறகு மாலையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.