மேஷம் ராசி அன்பர்களே, இன்று எந்த ஒரு வேலையையும் நீங்கள் உடனடியாக முடிக்க வேண்டும் என்று கடினமாக உழைப்பீர்கள், மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக தான் இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது ரொம்ப நல்லது. இன்று புதிய ஆர்டர்கள் பெறுவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை செய்து நன்மை பெறுவார்கள்.
இன்று உடல்நிலையை பொருத்தவரை எந்த வித மாற்றமும் இல்லை சிறப்பாகவே இருக்கும். ஆனால் சரியான நேரத்திற்கு மட்டும் உணவை எடுத்துக்கொள்ளுங்கள். இன்று தாய், தந்தையின் அன்பினால் சில முக்கிய பணியை நீங்கள் நிறைவேற்றுவீர்கள். பழைய பிரச்சினைகள் இன்று சாதகமாகவே முடியும். இன்று மாணவர்களுக்கு சிறப்பான நாளாகவே இருக்கும். கல்வியில் வெற்றி பெறக் கூடிய சூழலும் இருக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். முடிந்தால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறக்கும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்