வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி திமுகவின் பொதுக்குழு கூட்டம் கூட இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. சென்னை அமைந்தகரை செயின்ட் ஜார்ஜ் பள்ளி கன்வென்ஷனில் திமுக பொதுக்குழு கூட்டம் 9 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.
புதிய திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு செய்தற்வதற்கான பொதுக்குழு கூடுகின்றது. அதோடு தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெறும் என்ற அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டு இருக்கிறார்.