சென்னை அண்ணாநகரில் நடிகர் விஷால் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 26ஆம் தேதி இரவு சிகப்புநிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் நடிகர் விஷால் வீட்டை தாக்கினர். இதுகுறித்து விஷால் சார்பாக அவரது மேலாளர் ஹரிகிருஷ்ணன் அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 26ஆம் தேதி சிகப்புநிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் விஷால் வீட்டை தாக்கினர்.
அதற்கு ஆதாரமாக எங்களுடைய வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி வீடியோ பதிவையும் இப்புகாரில் இணைத்துள்ளோம். ஆகவே விசாரணை நடத்தி விஷால் இல்லத்தை தாக்கிய மர்ம நபர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.