மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், உங்களுடைய நிதியமைச்சர் உடைய வண்டியை நோக்கி ஒரு பெண்ணை அனுப்பி செருப்பால் அடிக்கிறார், முதலமைச்சர் உடைய கட்டவுட்களை கொளுத்துகின்றார்கள், முதலமைச்சர் உடைய கொடும்பாவியை கொளுத்துகின்றார்கள். முதலமைச்சர் உடைய சுவரொட்டிகளை கிழிக்கிறார்கள்.
எல்லா அநியாய, அக்ரமங்களையும் ஆட்டுக்குட்டி அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறான். தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், ஒரு அரசியல் கட்சியின் தலைவனாக அண்ணாமலை என்கின்ற இந்த தலைவன் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களை, தலைமைகளை, ஜனநாயக சக்திகளை மிக மோசமாக, மிக நாகரிகமாக, மிக ஒருமையில், மிக அவதூறான கருத்துக்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் தமிழக காவல்துறையும், தமிழக அரசும் ஏன் வேடிக்கை பார்க்க வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம் ? எச். ராஜா மீது உங்கள் சட்டம் பாய்ய மறுக்கின்றது. எஸ்.வி சேகர் மீது உங்கள் சட்டம் பாய்ய மறுக்கின்றது, கல்யாணராமன் மீது உங்கள் சட்டம் பாய்ய மறுக்கின்றது. எவனோ ஒருவன் ரொட்டி, ரெட்டி என்று அவதூறு வார்த்தைகளை தொலைக்காட்சிகளிலும், யூடியூப் சேனல்களிலும், மிக மோசமான வார்த்தைகளால்முதலமைச்சரை அவன், இவன், வாடா என்று கூப்பிட்டு பேசுகிறான்.
அவனை எல்லாம் ரெண்டு தட்டுத்தட்டி உள்ளே தூக்கி போட வேண்டிய காவல்துறை திராவிட முன்னேற்ற கழகம் என்கிற இந்த சமூக நீதி இயக்கம் இந்த நாட்டில் ஆட்சி கட்டிலில் அமர்வதற்கு காரணமாக இருந்த என் தாய் தமிழ் நாட்டின் இஸ்லாமிய உறவினர்களை கைது செய்வதற்கு உங்கள் காவல்துறை பயன்படுகிறது என்று சொன்னால், இது தமிழ் இனத்துக்கும், தமிழக அரசுக்கும் அவமானம் இல்லையா ? என ஆவேசமாக பேசினார்.