இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பொதுமக்களுக்கு லாபம் தரும் பல நல்ல திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் பெண்களுக்கு உதவும் வகையில் ஆதார் ஷீலா என்ற திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. இது பங்குச்சந்தையுடன் இணைக்கப்படாத திட்டம் என்பதால் ரிஸ்க் கிடையாது. எனவே முதலீடு செய்யும் தொகை பாதுகாப்புடன் இருப்பதோடு, உறுதியாக ரிட்டன் கிடைக்கும். ஒருவேளை பாலிசிதாரர் இறந்து விட்டால் கூட திட்டத்தின் பலன்கள் அவருடைய குடும்பத்தினருக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் 8 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இணையலாம்.
இந்நிலையில் திட்டத்தில் இணைபவர்கள் மருத்துவச் சான்றிதழ்கள் மற்றும் ஆதார் கார்டு கொடுப்பதுடன் சுகாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்க வேண்டும். இதனையடுத்து திட்டத்தின்படி காப்பீட்டுத் தொகை மாதம்தோறும் அல்லது காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு அடிப்படையில் செலுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் தினந்தோறும் 29 ரூபாய் முதலீடு செய்தாலே 4 லட்ச ரூபாய் வரை லாபம் கிடைக்கும். ஒரு நாளைக்கு 29 ரூபாய் என்றால் ஒரு மாதத்திற்கு மொத்த முதலீடு 10,959 ரூபாயாகும். இதேபோன்று 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் போது மொத்த தொகை 2,14,696 ரூபாயாக இருக்கும் பட்சத்தில், ரிட்டன் தொகை 3,97,000 ரூபாயாகும்.