பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், திரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான், ஜெயராமன், விக்ரம் பிரபு, சோபிதா துலி பாலா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங் குகளில் ரிலீசாக இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய், மணிரத்தினம் உட்பட குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது நடிகை ஐஸ்வர்யா ராய் மணிரத்தினத்தின் காலில் விழுந்து கும்பிட்டார்.
இதேபோன்று சென்னையில் நடந்த விழாவின்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலில் விழுந்து ஐஸ்வர்யா கும்பிட்டார். ஐஸ்வர்யா ராயின் இந்த செயல் ரசிகர்கள் பலராலும் தற்போது பாராட்டப்பட்டு வருகிறது. அதாவது எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் நம்முடைய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் தெரிந்து வைத்திருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். அதோடு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிப்பதற்கு மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவுக்கு மணிரத்தினம் ஆக்சன் சொல்லும் வாய்ப்பு கொடுத்ததால் ஐஸ்வர்யா ராய் மிகவும் நெகிழ்ந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.