Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மாஸ்டர்கார்டு இரானி கோப்பை….. ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி அறிவிப்பு…. யார் கேப்டன் தெரியுமா?

மாஸ்டர்கார்டு இரானி கோப்பைக்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா (RoI) அணி அறிவிக்கப்பட்டது.

மாஸ்டர்கார்டு இரானி கோப்பைக்கான போட்டியில் 2019-20 ரஞ்சி டிராபி சாம்பியன் சவுராஷ்டிரா அணியும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியும் அக்டோபர் 1-5 வரை ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் மோதுகிறது.. இந்நிலையில் இந்த இரானி கோப்பை 2022க்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா (ROI) அணியை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது.

ஹனுமா விஹாரி தலைமையிலான அணியில் மயங்க் அகர்வால், சர்பராஸ் கான், ஜெய்ஸ்வால் மற்றும் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய உம்ரன் மாலிக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்..கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக போட்டி நிறுத்தப்பட்ட நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு மதிப்புமிக்க இரானி கோப்பை போட்டி மீண்டும் நடைபெற உள்ளது.

ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி:

ஹனுமா விஹாரி (கேப்டன்), மயங்க் அகர்வால், பிரியங்க் பஞ்சால், அபிமன்யு ஈஸ்வரன், யாஷ் துல், சர்பராஸ் கான், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எஸ்.பரத், உபேந்திர யாதவ், ஜெயந்த் யாதவ், சவுரப் குமார், ஆர் சாய் கிஷோர்,முகேஷ் குமார், உம்ரான் மாலிக், குல்தீப் சென், அர்சான் நாக்வாஸ்வாலா.

Categories

Tech |