Categories
மாநில செய்திகள்

BREAKING: டிஜிபிக்கு ஆர்.எஸ்.எஸ் நோட்டீஸ் ..!!

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி மறுத்ததற்கு திருவள்ளூர் காவல்துறையினருக்கும், உள்துறை செயலாளர், டி.ஜி.பி.க்கும் நீதிமன்ற அவமதிப்பு ஆனது வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குமாறு  காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் திருவள்ளூரில் அணிவகுப்புக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் கடந்த 27ஆம் தேதி நிராகரித்து இருக்கிறார். இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனக்கூறி அணிவகுப்புக்கு அனுமதி கோரிய கார்த்திகேயன் சார்பில்,

தமிழக உள்துறை செயலாள,  டிஜிபி சைலேந்திரபாபு,  திருவள்ளூர் எஸ்.பி மற்றும் திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் ஆனது அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் அணிவகுப்பிற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கும்படி உத்தரவிட்ட நிலையில், அனுமதி மறுக்க எந்த அதிகாரமும் காவல்துறைக்கு இல்லை எனவும், அனுமதி மறுத்த உத்தரவை உடனடியாக எந்த நிபந்தனையும் இன்றி திரும்பப் பெறாவிட்டால்,

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய நேரிடும் எனவும், அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே உயர் நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து தான் அந்த ஊர்வலத்திற்கு அனுமதியும் வழங்கி இருக்கக்கூடிய நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி தங்களது செயல் இருக்கின்றது. எனவே உடனடியாக ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |