Categories
சினிமா தமிழ் சினிமா

ரீ ரிலீஸ்: 4 நாட்களில் அவதார் அள்ளியகோடிகள் இவ்வளவா?…. வெளியான தகவல்….!!!

டைட்டானிக் படம் மூலம் புகழ்பெற்ற ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் படம் ஆச்சரியமான கற்பனை உலகம், பிரம்மாண்டமான கிராபிக்ஸ் காட்சிகளால் உலகையை திரும்பி பார்க்க வைத்தது. இந்த படம் மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்றது. மேலும் ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனையும் செய்தது. இதில் ஷாம் வொர்கிங்டன், ஜோ சல்தானா, ஸ்டீபன் லாங் லிட்டர் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் அடுத்த பாகம் “அவதார் தீவு ஆப் வாட்டர்” என்ற பெயரில் தயாராகி உள்ளது.

இதன் படபிடிப்பு முடிந்து டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் 160 க்கும் மேற்பட்ட மொழிகளில் திரைக்கு வர உள்ளது. அந்த படம் வருவதற்கு முன்பாக அவதார் படத்தை நவீன உயர்தர தொழில்நுட்பத்தில் புதுப்பித்து 4 கே தரத்திலும் 3 டி தொழில்நுட்பத்தில் உலகம் முழுவதும் கடந்த 23ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில். மறு வெளியிட்டாலும் படத்திற்கு மவுஸ் குறையவில்லை. தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. 4 நாட்களில் உலக முழுவதும் ரூ.350 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் ரூ.7 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |