மக்களின் உணர்வுகளை வியாபார நோக்கத்தில் அணுக கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து கூறியிருக்கிறார்கள். கோவிலின் பெயரில் தனி நபர்கள் இணையதளம் நடத்துவது குற்றம் என்றும், தனிநபரில் நடத்தும் இணையதளங்கள் உடனடியாக முதுக்கப்படுவதை இந்து சமய அறநிலைத்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள். கோவில் பெயரில் தனி நபர்கள் இணையதளம் நடத்துவதை எதிர்த்து ராமநாதபுரத்தை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Categories