செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், செங்கோட்டையன் அவர்களுக்கு அமைச்சராக வாய்ப்பு கொடுத்ததே சசிகலா அம்மையார் அவர்கள், எடப்பாடி முதலமைச்சராக தேர்வு செய்த போது, மா.பா பாண்டியன் அவர்கள் அமைச்சர் பதவியில் இருந்து வெளியேறிவிட்டதால், அந்த கல்வித்துறை அமைச்சரை செங்கோட்டையனுக்கு கொடுத்தது சசிகலா அம்மையார் அவர்கள்..
எடப்பாடி பழனிச்சாமி கொடுக்கவில்லை. எதற்காக இவர் ஜாதி வெறியோடு பேசுகிறார் என்று தெரியவில்லை ? ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் எல்லா சமுதாய மக்களும் வாழ்கின்றோம், எல்லா ஜாதி மக்களும் இங்கே இருக்கிறோம். அண்ணா திமுகவில் வரலாற்றில் இதுவரை ஜாதியே இருந்தது கிடையாது, ஜாதியை பற்றி அம்மா அவர்களும் பேசியது கிடையாது.
எல்லா சமுதாய மக்களுக்கும் வாய்ப்பு கொடுப்பார்கள். ஆனால் இவர் இந்த ஜாதியை தவிர யாரும் முதலமைச்சராக வர முடியாது என்று கூறியிருப்பதை தனிப்பட்ட முறையில் வன்மையாக கண்டிப்பதோடு, உண்மையாகவே அவர் மனிதனாக இருந்தால் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து, இயக்கத்தை விட்டு வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் இதுதான் உங்களுக்கு கடைசி தேர்தலாக இருக்கும். ஒரு நாளும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என தெரிவித்தார்.