Categories
சினிமா தமிழ் சினிமா

“தொழிலதிபர் மனைவியிடம் 200 கோடி மோசடி”…. 4 நடிகைகள் திகார் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை….!!!!!!

தொழிலதிபர் மனைவியிடம் 200 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் நான்கு நடிகைகள் திகார் ஜெயிலுக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்து வருகின்றார்கள்.

டெல்லி தொழில் அதிபர் மனைவியிடம் 200 கோடி மோசடி செய்யப்பட்டதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரை சிறைக்கு சென்று நான்கு நடிகைகள் சந்தித்ததாக அமலாக்க துறையின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. நிக்கி தம்போலி, சாஹத் கன்னா, சோபியா சிங், அருஷா பட்டீல் உள்ளிட்ட நடிகைகள் சுகேஷ் சந்திரசேகரை சிறைக்குச் சென்று சந்தித்துள்ளார்கள். சுரேஷ் சந்திரசேகர் தனது பெயரை ஒவ்வொரு நடிகைகளிடமும் வேறு வேறு பெயரை கூறியிருக்கின்றார். மேலும் அந்த நடிகைகளுக்கு பரிசு வழங்கியிருக்கின்றார். சிறை அதிகாரிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்திருக்கின்றார். அங்கு அவர் சொகுசாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை அளித்த தகவலின் படி சுரேஷ் சந்திரசேகரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது, சுகேஷ் சந்திரசேகர் உடனான நடிகைகளின் சந்திப்பை மீண்டும் உருவாக்க முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதற்காக நடிகைகளை சிறைக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் வாயிலாக மோசடி எப்படி நடந்தது என்பதை பற்றி தங்களுக்கு ஒரு தெளிவு கிடைத்திருப்பதாக கூறியுள்ளார். சிறையில் சுகேஷ் சந்திரசேகர் டிவி, ஷோபா, தரை விரிப்பு என பல வசதிகளுடன் கூடிய அலுவலகத்தை வைத்திருக்கிறார்.

அவர் சிறை அதிகாரிகளிடம் சமரசம் செய்யப்பட்டிருக்கின்றது. சுரேஷ் சந்திரசேகரை சந்திக்க வரும் பார்வையாளர்களின் சொகுசு கார் சிறைக்குள் அனுமதிக்கப்பட்டதோடு பாதுகாப்பு சோதனைகளும் செய்யப்படவில்லை. இதற்காக சுகேஷ் சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்திருக்கின்றார். இதில் எங்கள் விசாரணைக்கு தொடர்புடையவர்களை மட்டுமே வரவழைத்து விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். தற்போது சுகேஷ் சந்திரசேகர் மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்.

Categories

Tech |