Categories
தேசிய செய்திகள்

ரயில்வே நிலையங்களை மேம்படுத்த 10,000 கோடி நிதி ஒதுக்கீடு…. மத்திய அரசின் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான பொதுமக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். ஏனெனில் மற்ற போக்குவரத்துகளை விட ரயிலில் கட்டணம் குறைவு என்பதால் பெரும்பாலான பயணிகள் ரயிலில் செல்வதையே விரும்புகின்றனர். அதோடு ரயிலில் பாதுகாப்பாகவும், வசதியாகவும் செல்ல முடிவதால் நீண்ட தூர பயணத்திற்கு பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இதனால் ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகிறது. அதோடு ரயில்வே துறையை மேம்படுத்துவதிலும் ரயில்வே நிர்வாகம் அதிக கவனம் செலுத்துகிறது.

ஏனெனில் ரயில்வே நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டால் தான் பொதுமக்களுக்கு வேண்டிய அனைத்து விதமான வசதிகளையும் செய்து கொடுக்க முடியும். அந்த வகையில் நாட்டில் உள்ள மிகவும் பழமையான மற்றும் பழுதடைந்த நிலையில் இருக்கும் ரயில்வே நிலையங்களை சீரமைப்பதற்கு ரயில்வே நிர்வாக முடிவெடுத்துள்ளது. இதன் முதற் கட்ட துவக்கமாக அகமதாபாத், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பழுதடைந்த ரயில்வே நிலையங்களை சீரமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி  ரயில்வே நிர்வாகம் மும்பை, டெல்லி மற்றும் அகமதாபாத்தில் உள்ள ரயில்வே நிலையங்களை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முன்மொழிவு செய்தது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. அப்போது ரயில்வே நிர்வாகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி பழுதடைந்த நிலையில் காணப்படும் மும்பை, அகமதாபாத் மற்றும் டெல்லியில் உள்ள 3 ரயில்வே நிலையங்களை சீரமைப்பதற்கு ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |