நைட்ரஜன் எரிவாயு சிலிண்டர் வெடித்து 3 ஊழியர்கள் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டத்தில் வசாய் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு தொழிற்சாலை ஒன்றிய அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் ஏராளமான ஊழியர்கள் பணி புரிகின்றனர். இந்நிலையில் திடீரென தொழிற்சாலையில் நைட்ரஜன் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் உடல் சிதறி மூன்று ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் காயம் அடைந்த 8 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது. இன்று வசாய் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் நைட்ரஜன் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இதில் 3 பேர் உடல் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதறி உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனக் கூறியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.