Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கணவர் அழைத்து செல்லவில்லை” 9 மாத கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு….. கதறி அழுத குடும்பத்தினர்….!!!

9 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளோட்டம் பரப்பை பகுதியில் முருகேசன்- ஜெயமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சத்யா(25) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஆண்டு சத்யாவுக்கும், சஞ்சய் அருள் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 3 மாதத்திற்கு முன்பு பெற்றோர் சத்யாவுக்கு வளைகாப்பு நடத்தி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். நேற்று முன்தினம் ஜெயமணி தனது மருமகனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் சத்யாவை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து செல்ல வேண்டும். எனவே கார் எடுத்து வாருங்கள் என கூறியுள்ளார். அதற்கு எனக்கு உடல்நிலை சரியில்லாததால் நாளைக்கு வருகிறேன் என சஞ்சய் கூறியதாக தெரிகிறது.

இதனை கேட்டு கோபமடைந்த சத்யா அறைக்குள் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து ஜன்னல் வழியாக பெற்றோர் பார்த்தபோது தங்களது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கதவை உடைத்து சத்யாவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சத்யாவை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பரிசோதனைக்கு கணவர் அழைத்து செல்ல வராததால் மன உளைச்சலில் சத்யா தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |