தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தின் கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென்னாபிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய குவிண்டன் டிகாக் 1, கேப்டன் டெம்பா பவுமா 0 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதனைத்தொடர்ந்து வந்த ரிலீ ரோசோவ், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் பெவிலியன் திரும்பினர்…
தென்னாபிரிக்கா அணி 8 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்கத்திலேயே பந்தை ஸ்விங் செய்து தீபக் சாஹர் மற்றும் அர்ஷ்தீப் சிங் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்தனர்.. பின் வந்த எய்டன் மார்க்ரம் 25 ரன்களும், வெய்ன் பார்னல் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.. கடைசியில் கேசவ் மஹாராஜ் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இறுதியில் 20 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட் இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மேலும் ரபாடா 7 ரன்களும், அன்ரிச் நார்ட்ஜே 2 ரன்களும் எடுத்தநிலையில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், தீபக் சஹர் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளும், அக்சர் படேல் 1 விக்கெட்டும் எடுத்தனர்..
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். ரோஹித் சர்மா ராபாடா வீசிய மூன்றாவது ஓவரில் குண்டன் டிக்காக்கிடம் டம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி ஆட்டமிழந்தார்.. பின்வந்த வந்த கோலி 3 ரன்களில் நார்ட்ஜே ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். பின் உள்ளே வந்தார் சூர்யா குமார் யாதவ்.. சூர்யகுமார் – கே.எல் ராகுல் ஜோடி சேர்ந்தனர்.. தொடக்கத்திலிருந்து ராகுல் ஆமை வேகத்தில் பொறுமையாக தட்டி தட்டி ஆடி வந்தார்.
சூரியகுமார் வந்த வேகத்தில் நார்ட்ஜே வீசிய 7ஆவது ஓவரில் தொடர்ந்து 2 சிக்ஸர்களுடன் தனது ஆட்டத்தை தொடங்கினார். ராகுல் பொறுமையாக ஆட, மறுபடியும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாட இறுதியில் 16.4 ஓவரில் 2 விக்கெட் இழந்து 110 ரன்கள் எடுத்து இந்திய அணி வென்றது. சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் ( 5 பவுண்டரி, 3 சிக்சர்) 50 ரன்களுடனும், கேஎல் ராகுல் 56 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து களத்தில் ஆட்டமிழக்காம்ல் இருந்தனர். இதனால் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
India complete a dominant win to go 1-0 up in the series 💪🏻#INDvSA | Scorecard: https://t.co/hTroM6A741 pic.twitter.com/aRbP8FuQRw
— ICC (@ICC) September 28, 2022