அசாம் மாநிலத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
அசாம் மாநிலத்தில் உள்ள காம்ருப் மாவட்டத்தில் இருக்கும் பகுருதியா பகுதியை சேர்ந்த அப்துல் வாகா என்ற இளைஞர் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் இருக்கும் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். இவர் சில வாரங்களுக்கு முன்பாக சொந்த ஊருக்கு சென்றார்.
பின்னர் அவர் தான் காதலித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவியை அங்கிருந்து ஓசூருக்கு கடத்தி வந்து திருமணம் செய்து கொண்டு சிப்காட் பகுதியில் குடும்பம் நடத்தி வந்த நிலையில் மாணவியின் பெற்றோர் தங்களது மகளை அப்துல் வாகா கடத்திச் சென்று விட்டதாக அசாம் மாநிலத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அப்துல் வாகாவை கைது செய்தார்கள். பின் மாணவியை மீட்டு இரண்டு பேருக்கும் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் இருவரையும் அசாம் போலீசார் அசாம் மாநிலத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.