Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வேறலெவல்….. எகிறியடிக்கும் சூர்யா… “டி20 தரவரிசையில் அதிரடி முன்னேற்றம்”…. எந்த இடம் தெரியுமா?

ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத வீரராக இருப்பவர் சூர்யா யாதவ்.  இந்தியாவின் மிஸ்டர்  360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் அனைத்து திசையிலும் சிக்ஸர் அடிக்கக்கூடிய வல்லமை படைத்தவர்.. அதேபோல ஓபனிங் ஆக இருந்தாலும் சரி, மிடில் வரிசையாக இருந்தாலும் சரி, எந்த இடத்தில் இறக்கி விட்டாலும் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஆடக்கூடியவர்.. நாளுக்கு நாள் சூர்யாவின் ஆட்டம் ஏறுமுகமாகவே இருக்கிறது. கடைசியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரிலும் சிறப்பாகவே ஆடி இருந்தார் சூர்யகுமார் யாதவ் கடைசியாக கடந்த 25ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 36 பந்துகளில் 69 ரன்களை விளாசி இருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து தற்போது ஆண்களுக்கான ஐசிசி டி20ஐ தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், சூர்ய குமார் யாதவ் 801 ரேட்டிங் புள்ளியுடன் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.. கடந்த வாரம் வெளியான பட்டியலில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி 3ஆவது இடம் பிடித்திருந்த சூர்யகுமார் தற்போது தென்னாபிரிக்க வீரர் எய்டன் மார்க்ரமையும் தாண்டி இரண்டாவது இடத்தை தக்க வைத்தார்..

அதேசமயம் முதலிடத்தில் மற்றொரு பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் (861 ரேட்டிங் புள்ளி) தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறார். சூரியகுமார் யாதவ் தொடர்ந்து சிறப்பாக ஆடும்பட்சத்தில் முதலிடத்தையும் தன் வசமாக்குவார் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.. இந்த தரவரிசை பட்டியலில் இந்திய பேட்டர்கள்  யாரும் முதல் 10 இடத்தில் கிடையாது. சூரியகுமார் மட்டுமே மட்டுமே இருக்கிறார்.. இவரை தவிர 13ஆவது இடத்தில் கேப்டன் ரோகித் சர்மாவும், 15ஆவது இடத்தில் விராட் கோலியும் உள்ளனர்..

இதற்கிடையே தென்னாபிரிக்காவுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் (5 பவுண்டரி,  3 சிக்ஸர்கள்) 50 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Categories

Tech |