ஏர்டெல் நிறுவனம் ஒன்றிக்கான கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஆட்-ஆன் சலுகையை ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தது. இந்த சலுகையின் படி கூடுதலாக இரண்டாவது இணைப்பாக தங்களது நண்பர்களையும் இணைத்துக்கொள்ள முடியும்.
இதற்கான கட்டணம் ரூபாய் 199 என நிர்ணியக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் பயன் பெற்று வந்த நிலையில், தற்போது இதனை ரூபாய் 249க்கு அதிரடியாக ஏர்டெல் நிறுவனம் உயர்த்தியுள்ளது. இது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை எஸ்எம்எஸ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க இருப்பதாகவும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.