செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், ஆ.ராசா ஹிந்து மதத்தை சேர்ந்தவரை புண்படுத்திவிட்டார் என்ற இந்த கேள்வியே தப்பு. ஆ.ராசா குறிப்பிட்ட சமூகத்தை பத்தி எல்லாம் ஒன்னும் சொல்ல. தமிழர்கள் திட்டமிட்டு சாதியால் இழிவுபடுத்தப்பட்டார்கள். இதை இந்த நாட்டில் இருக்கக்கூடிய மனுதர்மம் செய்தது. ஆகவே ஜாதிகளால் பிரிந்து கிடப்பதற்கு காரணம் அவர்கள்தான் என்று ஆணித்தனமாகவும், அழுத்தம் திருத்தமாகவும், அறிவார்ந்த தளத்திலிருந்து பேசினார்.
அவர்கள் சொல்வதை நான் அங்கீகரிக்கிறேன். அப்படி சொல்லுகின்ற ஆளுமையும், ஆற்றலும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா அவர்களுக்கு இருக்கிறது. இப்படி சொல்லி தமிழ்நாட்டில் இன்றைக்கு வாலிப நெஞ்சங்களில் உள்ளங்களை கொள்ளை கொண்ட ஆ.ராஜாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
தமிழ்நாட்டில் திட்டமிட்டு ஒரு கலவரத்தை உருவாக்கி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்கிற மாயத் தோற்றத்தை உருவாக்குவதற்கு பாஜகவினர் படாதபாடு படுகிறார்கள். ஆ.ராசா ஹிந்து தானே. அவர் அங்கே இருக்கிற அழுக்கை, அவலத்தை, அபாயத்தை சுட்டிக்காட்டுகிறார். அவருக்கு அந்த உரிமை இருக்கு. சொல்லி இருக்காரு. ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பாஜகவினருக்கு உரிமை இருக்கிறது நடத்தட்டும் என தெரிவித்தார்.