இன்று உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழை உலகமயமாதலில் இருந்து பாதுகாக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.
இன்று உலக தாய்மொழி தினம். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் தாய்மொழியை புகழ்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில்,
நமது தாய்மொழியான தமிழ் மிகவும் பழமையான தொன்மையான மொழி அதனை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். உலகமயமாதல் என்னும் பெரும் பூதம் உள்ளூர் கலாச்சாரத்தை விழுங்கிக் கொண்டிருக்கிறது. மொழி மீது வாய் வைத்து கடித்து செரித்து அதனுடைய சுவடுகளைப் பதிக்க நினைக்கிறது. இதனை ஒருபோதும் அனுமதிக்க விடாமல் தமிழை வளர்க்க பல புதுப்புது நடவடிக்கைகளை இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.