இளம் இதயங்களை காப்போம் என்ற பெயரில் குறும்பட போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக இதய தினம் அன்று இளம் இதயங்களை காப்போம் என்ற பெயரில் ஒரு மாதம் பரப்புரை திட்டம் நடைபெற இருக்கின்றது. இது செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்க ஒரு குறும்பட போட்டி அறிவிக்கப்பட்டது. இதில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசு தொகையும் வழங்கப்படுகின்றது. முதல் பரிசாக 1,00,000 லட்சம் ரூபாயும் இரண்டாவது பரிசாக 50,000 ரூபாயும் மூன்றாம் பரிசாக 25,000 ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்பட விழாவை யுவன் சங்கர் ராஜா தொடங்கி வைத்து பேசியுள்ளதாவது, “சிந்தனையை தூண்டிவிடுகின்ற சிறப்பான குறும்படங்களின் மூலம் ஒவ்வொருவரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக வளர்ந்து வரும் திரைப்படங்களை பார்க்க நான் ஆவலாக இருக்கின்றேன். உங்களின் முழு திறமையை வெளிப்படுத்துமாறு ஒவ்வொருவரையும் ஊக்குவிக்க நான் விரும்புகின்றேன். இளம் வயதில் இதய நோய் வராமல் தடுப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சமூக விழிப்புணர்வுக்காக இந்த செயல்திட்டதை நிஜத்தில் செயல்படுத்த உதவியுள்ள அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக” பேசியுள்ளார்.