Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

டிக் டாக் மாணவன்…. பயம் கொண்ட மக்கள்… போலீசாரிடம் கோரிக்கை..

டிக் டோக் வீடியோ பதிவு செய்ய  மக்களை முகம் சுழிக்க வைத்த கல்லூரி மாணவனை கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் டிக் டாக் எனும் செயலியை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சி பகுதியை சேர்ந்த கண்ணன் எனும் கல்லூரி மாணவன் பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் எதிர்பாராத நேரங்களில் மக்கள்மீது இடித்தும் அவர்கள் முகம் சுளிக்கும் வண்ணம் நடனமாடியும் அவர்களை அச்சுறுத்தும் வகையில் டிக் டாக் வீடியோ பதிவு செய்து வெளியிட்டு வந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அந்த மாணவரை கைது செய்ய வேண்டுமென மக்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களது கோரிக்கையை எடுத்துக்கொண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மக்களை பயம் கொள்ள செய்யும் வகையில் டிக்  டாக் பதிவிடும் கல்லூரி மாணவனை கைது செய்யக்கோரி வடகாடு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். உத்தரவின் அடிப்படையில் கல்லூரி மாணவன் கண்ணனை வடகாடு காவல்துறையினர் கைது செய்தனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |