செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டிலே பாரதிய ஜனதா கட்சியினுடைய தொண்டர்களின் மீது, நம்முடைய தொண்டர்களுடைய சொத்துகளின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கின்ற வன்முறை என்பது, இன்னும் நிற்கவில்லை. மதுரையில் நீங்க பார்த்தீங்க.. எப்படி ? ஓபன் ஆக வந்து… மதுரையில நம்முடைய இயக்கத்தை சார்ந்த சகோதரர்களுடைய இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசினார்கள் என்று… இது அனைத்து இடத்திலும் நடந்து கொண்டிருக்கின்றது.
நம்முடைய கட்சி மூத்த தலைவர்கள் தமிழகத்தினுடைய மாண்புமிகு டிஜிபி அவர்களை சந்தித்து, உள்துறை செயலாளரை சந்தித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கின்றது. கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற பகுதிகளில் நம்முடைய தொண்டர்கள் யாரெல்லாம் இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ, இந்த குண்டு வீச்சில் யாரெல்லாம் சொத்து சேதப்படுத்தி இருக்கிறீர்களோ, அவர்கள் இல்லத்திற்கு நான் செல்ல இருக்கிறேன். கோவை, திருப்பூர் மாநகரத்தில என்னுடைய சுற்றுப்பயணம் இருக்கின்றது.
அதே நேரத்தில் பாதிய ஜனதா கட்சி நான்கு பேர் கொண்ட குழுக்களை உருவாக்கி இருக்கின்றோம். அந்த நான்கு குழுக்களுக்கும் 4 நம்முடைய எம்எல்ஏக்கள் தலைவர்களாக இருப்பார்கள். மரியாதைக்குரிய கோயம்புத்தூர் எம்எல்ஏ வானதி சீனிவாசன் அவர்கள் இந்த பகுதியின் குழுக்களுக்கும், மரியாதைக்குரிய அண்ணன் எம்.ஆர் காந்தி அவர்கள் கன்னியாகுமரி, மதுரை பகுதியினுடைய குழுக்களுக்கும், மரியாதைக்குரிய அண்ணன் நையினார் நாகேந்திரன் எம்எல்ஏ அவர்கள், மரியாதைக்குரிய எம்எல்ஏ அருமை அம்மா டாக்டர் சரஸ்வதி அவர்கள் இந்த நான்கு குழுவின் உடைய தலைவர்களாக, பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர்களும் அந்த குழுவில் இருக்கின்றார்கள்.
தமிழகத்தில் அனைத்து இடத்திற்கும் சென்று சேதமதிப்பீடு செய்து, காவல்துறையும் முறையாக நமக்கு FIR வழங்கியிருக்கிறார்களா ? முறையாக பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதா ? நம்முடைய சொத்துக்களுக்கு, நம்முடைய தலைவர்களுக்கு என்பதை கண்டறிந்து, அவர்கள் கொடுக்கப்படுகின்ற அந்த ரிப்போர்ட் மாநில தலைவருக்கு, நம் மூலமாக உள்துறை அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்க இருக்கின்றோம் என தெரிவித்தார்.