கேரள மாநிலம் திருச்சூர் குன்னம்குளம் போர்குளத்தில் சாய்ஜுன்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து தனியாக இருந்த 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சா பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சாயுஜினை கைது செய்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை குன்னம்குளம் அதிவிரைவு சிறப்பு போக்சா கோர்ட்டில் நடைபெற்ற வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணையில் சாயுஜீன் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொடர்ந்து அவருக்கு 50 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.60,000 அபதாரமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.