Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு ஜாக்பாட்….! இவர்களுக்கு ரூ.6 லட்சம் வரை பரிசு…. உடனே விண்ணப்பிக்கவும்….!!!!

தமிழகத்தில் வேளாண்மை துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு வேளாண் மற்றும் தோட்டக்கலை சார்பாக பரிசு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வேளாண் துறையில் இயற்கை விவசாயம், புதிய கண்டுபிடிப்பு, ஏற்றுமதியில் சாதனை செய்யும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். வேளாண் துறை அதிகாரிகள் மூலம் தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு 6 லட்சம் வரை பரிசு வழங்கப்படும்.

2021-22-ம் ஆண்டில் இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி, வேளாண்மையில் புதிய உள்ளூர் கண்டுபிடிப்பு ஆகிய மூன்று இனங்களில் சிறந்து விளங்கும் விவசாயிகளை அரசு ஊக்குவித்து பாராட்டி பரிசளிக்கும் திட்டத்தை  அறிமுகப்படுத்தி ரூ.6 லட்சம் நிதியும் ஒப்பளிக்கப்பட்டது. நடப்பாண்டிலும் இத்திட்டத்தை செயல்படுத்தி, மேற்கண்ட 3 இனங்களில் சிறந்து விளங்கும் விவசாயிகளை தொடர்ந்து ஊக்குவித்து, பாராட்டி பரிசளிக்கும் என்றும் கடந்த வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள், உழவன் செயலி மூலமாகத் தங்களது பெயர்களை பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை முறையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பித்திட வேண்டும். குத்தகை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான நுழைவுக்கட்டணமாக ரூ.100-ஐ சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் செலுத்தி படிவத்துடன் இணைத்திட வேண்டும்.

 

Categories

Tech |