Categories
அரசியல் மாநில செய்திகள்

தீய சக்தி பழனிசாமி!…. தைரியமிருந்தால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ங்க?…. புகழேந்தி தாறுமாறு பேச்சு….!!!!

சேலம் மாவட்டத்தில் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற புகழேந்தி, எடப்பாடி பழனிசாமியையும், அவரது தரப்பினரையும் கடுமையாக சாடினார். அதாவது “எடப்பாடி பழனிச்சாமியின் தரப்பினர் ஜாதி பேச்சுகளில் அதிகளவு கவனம் செலுத்துகின்றனர். கொங்குமண்டலத்தை சேர்ந்தவர்கள், எடப்பாடி பழனிசாமியை வரவேற்கவில்லை. எடப்பாடி பற்றி இன்னும் பல்வேறு ரகசியங்கள் இருக்கிறது. அம்மா அவர்கள் சிறையில் இருந்தபோது என்னென்ன துரோக வேலைகள் செய்தார்கள் என்பது குறித்த பாகம் 2 விரைவில் வெளியாகும்.

தமிழகம் முழுதும் இனி எடப்பாடி பழனிசாமியை தீய சக்தி பழனிசாமி என அழைக்கப்பார்கள் என்று புகழேந்தி அவருக்கு பட்டத்தை வழங்கினார். எடப்பாடி பழனிசாமிக்கு தைரியமிருந்தால் தற்போதுள்ள எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிட தயாரா..? நானும் தேர்தலில் போட்டியிடுகிறேன். அதில் யார் ஜெயிப்போம் என்று பிறகு தெரியும் என்று ஆவேசமாக கூறினார். அதன்பின் எடப்பாடி பழனிச்சாமி என்று அழைக்கப்படும் இவரை பொதுஎதிரியாக கருதி அரசியல் ரீதியாக இன்றுமுதல் தீயசக்தி பழனிசாமி என அழைக்கவேண்டும்” என்று கூறிய புகழேந்தி இந்த புது பட்டத்தை வெளியிட்டு அதற்கான துண்டு பிரசுரத்தையும் வெளியிட்டார்.

Categories

Tech |