Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் RSS ஊர்வலம்: வரிசையாக தடை விதிப்பு… பல மாவட்ட போலீஸ் அதிரடி …!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வருகின்ற இரண்டாம் தேதி என்று தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பேரணிக்கு அனுமதி கேட்டிருந்தது. ஆனால் அனுமதி வழங்கப்படாததால் நீதிமன்றத்தின் நாடி, நீதிமன்றத்தின் மூலமாக அனுமதி பெற்று இருந்தது. நீதிமன்றமும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது.

இந்நிலையில் தான் கடலூர் மாவட்டம், திருச்சி, புதுக்கோட்டை, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறை ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்திருக்கிறது.அதே போல ராமநாதபுரம், திண்டுக்கல், பழனி, தென்காசி மாவட்டம் – சங்கரன்கோவில் பகுதிகளிலும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடையானது விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலும் அனுமதி மறுத்துள்ள காவல்துறை, திருச்சி, கடலூர், சேலம் என அடுத்தடுத்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதி மறுப்புக்கு காவல்துறை சொல்லப்படும் காரணம் என்னவென்றால்,  தமிழக முழுவதும் கடந்த 22ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட போது ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா” அமைப்பை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். அதன் எதிரொலியாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள், எதிர்பார்க்கப்படாத பல்வேறு விதமான சட்ட விரோத பிரச்சனைகளும் நடந்து கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்தில் பொதுமக்களுக்கு அமைதியான சூழலை மேற்கொள்ள வேண்டும். காவல்துறைய அப்படிப்பட்ட வேலைகளில் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கிறது எனவே அனுமதி வழங்க முடியாது என நேற்று இரவு பல்வேறு மாவட்ட ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர்களுக்கு அந்தந்த மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அக்டோபர் இரண்டாம் தேதி வேறு சில அமைப்புகளும் தமிழகம் தழுவிய சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்த அனுமதி கூறியதால் முடிவு எனவும் சொல்லப்டுகின்றது. இதனால் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் 2ஆம் தேதி நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Categories

Tech |