கியூபா நாட்டில் உண்டான பயங்கர புயலால் நாடே இருளில் மூழ்கி போயிருக்கிறது.
கியூபா நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இவான் என்னும் மிகப்பெரிய புயல் உருவானது. ஒரு மணி நேரத்திற்கு சுமார் 195 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் நாட்டின் முக்கியமான மின் நிலையங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின.
இதில் மின் உற்பத்தியும் பாதிப்படைந்தது. மேலும் நாடு முழுக்க இருளில் மூழ்கிப்போனது. நாட்டு மக்கள் மின்சாரமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இயல்பு வாழ்க்கையும் மொத்தமாக முடங்கி போனது. எனவே, மீண்டும் மின் உற்பத்தியை தொடங்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே இந்த புயலில் சிக்கி இருவர் உயிரிழந்ததாகவும், அதிக அளவில் பொருட்சேதங்கள் உண்டானதாகவும் கூறப்பட்டிருக்கிறது.