சென்னை, கோவை, திருச்சி போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணி நிமித்தமாக வசித்து வருகின்றனர். இவர்களின் பெரும்பாலும் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்கள்ண் தொடர் விடுமுறை நாட்களிலும் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ரயில், பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பண்டிகை காலங்களில் குவியும் கட்டுக்கடங்காத பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளை அடிப்பது தொடர்ச்சியாக நடைபெறுகிறது. தற்போது கூட ஆயுத பூஜை முன்னிட்டு சென்னையிலிருந்து நெல்லைக்கு ரூ.2500 முதல் ரூ.4000 வரை கட்டண நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல சென்னை டூ கோவைக்கு ரூ.3200 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இது வழக்கமான கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிகம் என்றாலும் பண்டிகைக்கு ஊருக்கு சென்றாக வேண்டும் என்பதால் தங்களுக்கு வேறு வழி இல்லை என்று அழாத குறையாக பயணிகள் கூறுகின்றனர். அதனைத் தொடர்ந்து ஆமினி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சொன்னாலும் அந்த நடவடிக்கை பெயரளவிலேயே இருப்பதாகவும், கட்டண கொள்ளை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனையடுத்து பயணிகளின் இந்த வேதனையை கருத்தில் கொண்டு பயண கட்டணம் குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பயனாக ஆம்னி பேருந்துகளின் பயண கட்டணம் குறைக்கப்பட உள்ளதாகவும், புதிய பயண கட்டணம் பட்டியல் வெகு விரைவில் வெளியிடப்படும் என்று ஆம்னி பேருந்த சங்கம் தெரிவித்துள்ளது.