Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜீரோ”ஆக்கிய எடப்பாடி…! சிரிக்குறத பாருங்க… இதுலாம் நியாயமா ? செல்லூர் பேச்சால் கலகலப்பான ADMK மேடை …!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீயை பேச அழைத்த போது, மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், அமைப்பு செயலாளர், முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர்,  இந்த மாபெரும் மாநாட்டை ஒருங்கிணைந்து வழிநடத்தி கொண்டு இருக்கின்ற அண்ணன் செல்லூர் ராஜீ அவர்கள், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருக்கு பூங்கோத்து கொடுத்து, தன்னுடைய வீர உரையும், சிரிப்பு உரையும் ஆற்றுவார்கள் என தெரிவித்தார்.

அப்போது விழா மேடையில் இருந்த அதிமுக நிர்வாகிகள் மாற்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்தார். பின்னர் மேடையில் பேசிய தொடங்கிய செல்லூர் ராஜீ, எப்பா நம்மள காமெடி ஆகிட்டு போறாரப்பா.. நியாயமாப்பா.. என சொல்லி பேசிய அவர்,  இன்னைக்கு ஒரு அற்புதமான கூட்டம். கூட்டமா ? மாநாடு. அண்ணனை வரவேற்க.  நம்ம கதாநாயகன். தலைவருக்கு பிறகு பார்.. சிரிப்போடு உட்கார்ந்திருக்காரு. சிரிப்பே ஒரு அழகு. என்ன சொல்றீங்க ? அங்க பாருங்க சிரிக்கிறதை.. இந்த சிரிப்பே எல்லா தலைவர்களையும் ஸிரோ ஆக்கிடுச்சு.

எல்லாரும் நினைச்சு பாக்குறாங்க. என்னடா எடப்பாடி…!  என்னடா எடப்பாடியார் அப்படின்னு சொல்றாங்க. இந்த மண்ணு இன்னைக்கு இல்ல,  என்றும் மனித புனிதம் புரட்சித் தலைவரின் கோட்டை. இறந்தும் இறைவனாக இருக்கின்ற தங்கமான தலைவன் புரட்சித்தலைவரை உச்சானி கொம்பிலே உட்கார வைத்து அழகு பார்த்த ஒரு மாவட்டம் என்றால் ? அது அண்ணா திராவிட முன்னேற்ற கழக மதுரை மாவட்டம் என பேசினார்.

Categories

Tech |