Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு வைத்திருப்பவருக்கு ALERT..… உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லாவிட்டால் பெரிய பிரச்சனை….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. ஆதார் கார்டு இல்லாவிட்டால் எதுவுமே கிடைக்காது என்ற நிலை தற்போது வந்து விட்டது. சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது தேவைப்படுகிறது. அதே சமயம் ஆதார் கார்டு பணம் தொடர்பான ஒரு ஆவணமாகவும் உள்ளது.வங்கியில் கடன் வாங்குவதற்கு ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது.ஆதார் கார்டு வைத்து கடன் வாங்கி ஏமாற்றி விட்டதாக புகார்களும் எழுந்துள்ளன.

அதற்காக ஒருவருடைய ஆதார் கார்டை வேறு யாராவது தவறுதலாக பயன்படுத்தவும் அதிக வாய்ப்பு உள்ளது. அவ்வாறு உங்களுடைய ஆதார் கார்டை வேறு யாராவது திருடி விட்டால் , ஆதார் கார்டில் ஒரு பாதுகாப்பு அம்சத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது மாஸ்க் ஆதார் கார்டு என்ற சிறப்பு அம்சம் உள்ளது.இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் உங்களுடைய ஆதார் நம்பரில் உள்ள முதல் 8 இலக்கங்கள் மறைக்கப்பட்ட விடும். இதனை வேறு யாரும் பார்க்க முடியாது.ஆதார் கார்டு வைத்துள்ள அனைவரும் மாஸ் ஆதார் கார்டை டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

அதற்கு முதலில் ஆதாரம் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான uidai.gov.inஎன்ற இணையதள பக்கத்திற்குச் சென்று டவுன்லோட் ஆதார் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்ததாக திறக்கும் பக்கத்தில் ஆதார் எண் மற்றும் பெயர் உள்ளிட்ட பல விவரங்களை உள்ளிட வேண்டும். டவுன்லோட் செய்ய விரும்பும் ஆதார் வகைகளில் மாஸ்க் ஆதார் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி அதில் டைப் செய்து மாக்ஸ் ஆதார் கார்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Categories

Tech |