கேரள மந்திரி சபை கூட்டம் முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நேற்று திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஒரு சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது நவராத்திரி விழா வருகிற அக்டோபர் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக மூன்றாம் தேதி துர்காஷ்டமி வருகிறது இதனை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு மூன்றாம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வருகிற நான்காம் மற்றும் ஐந்தாம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்றாம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் அந்த விடுமுறையை ஈடுகட்ட மற்றொரு நாளில் பள்ளி கல்லூரிகளில் வகுப்புகளில் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
Categories