சென்னை அருகே காதலி வராத ஆத்திரத்தில் காவல் நிலையத்தில் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மாவட்டம் தேனாம்பேட்டை நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் உணவு விநியோகிக்கும் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் உஷா என்ற பெண்ணை பல மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கமும் அவ்வபோது பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு நாம் பிரிந்து விடலாம் என்று உஷா கூறியதோடு வேறு ஒருவனை காதலிக்க போவதாகவும் வெங்கடேஷிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் யூடியூபில் பெட்ரோல் குண்டு செய்வது எப்படி என்பதை பார்த்து பெட்ரோல் குண்டு தயார் செய்து உஷாவை கொல்ல சதித்திட்டம் தீட்டினார். அதன்படி நேற்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் புத்தக சோதனைச்சாவடி அருகே உஷாவை கொஞ்சம் பேசவேண்டும் என்று கூறி வரவழைக்க திட்டமிட்டார். சரி வருகிறேன் என்று உறுதியளித்த உஷா நீண்ட நேரம் ஆகியும் வராததால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் கையில் இருந்த பெட்ரோல் கொண்டே அருகில் இருந்த காவல் துறையின் சோதனைச் சாவடி மீது எறிந்து விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
பின் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பது தெரியவர அவர் வீட்டில் அதிரடியாக நுழைந்து இன்று காலை அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வர அவரை புழல் சிறையில் அடைத்தனர்.