Categories
தேசிய செய்திகள்

“பசி அடங்கிவிட்டது” வயிறு வலி குறையவில்லை…. மொத்தம் 62 ஸ்பூன்கள்….. அதிர்ந்து போன மருத்துவர்கள்….!!!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 32 வயது இளைஞருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. அருகில் உள்ள மெடிக்கல்களில் மாத்திரை வாங்கி சாப்பிட்டும் அவருக்கு வயிற்று வலி தீரவில்லை. பின்னர் முசாபர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்து ஸ்கேன் எடுத்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அவரது வயிறு மற்றும் குடல் பகுதியில் ஏராளமான  ஸ்பூன்கள் இருந்தன. இந்த ஸ்பூன்களில் தலை இலை, கைபிடிக்கும் பகுதிகள் மட்டுமே காணப்பட்டன. இதையடுத்து அந்த இளைஞருக்கு இளைஞருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றில் இருந்த ஸ்பூன்கள் அகற்றப்பட்டன. மொத்தம் 62 ஸ்பூன்கள் அகற்றப்பட்டன. தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், மருத்துவர்களிடம் அந்த இளைஞர், தீராத பசியாக இருக்கும்போது உணவு கிடைக்காவிட்டால் ஸ்பூனை அதிகமாக சாப்பிடுவேன். பசி அடங்கிவிட்டது வயிற்று வலி குறையவில்லை என கூறியுள்ளார்.

Categories

Tech |