கலவரத்திற்கான கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து அந்த பள்ளிக்கு எதிராக ஜுலை 17ஆம் தேதி நடத்தப்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது.. இது தொடர்பாக பல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன.. அதில் ஒரு வழக்கு தான் கலவரத்திற்குள்ளான கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது.
அதாவது, தேசிய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எல் ரவி என்பவர் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி விடுதி அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதால் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கிறது.. அதற்காக அனைத்து பள்ளிகளையும் அரசே ஏற்க முடியுமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் மனுவில் எந்த தகுதியும் இல்லை, நியாயமான காரணம் ஏதுமில்லை எனக் கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்..