பண்டிகைகாலம் துவங்கி இருப்பதால் முன்னணி நிறுவனங்கள் அதிரடி ஆஃபர்களை அறிவித்துருக்கிறது. ஏதேனும் பொருட்களை வாங்க நீங்கள் திட்டமிட்டு இருந்தால் இதுவே சரியான நேரம் ஆகும். 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட தள்ளுபடியில், அதாவது பாதி விலையில் பொருட்களை அள்ளி செல்லலாம். பிளிப்கார்ட், அமேசான் ஆகிய ஆன்லைன் வர்த்தக தளங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது சாம்சங் இந்தியா தன் No Mo FOMO Sale விற்பனையைத் துவங்கியுள்ளது. ஆன்லைன் விற்பனையில், அனைத்து வகையான வீட்டுஉபயோகப் பொருட்கள், தொழில்நுட்ப பாகங்கள் மற்றும் ஸ்மார்ட் போன்கள்-டிவிகள் போன்றவற்றில் சிறப்பான சலுகைகளை சாம்சங் வழங்குகிறது.
மலிவான விலையில் தரமான போனை வாங்கவிரும்பினால், இந்த விற்பனையில் சாம்சங்போனை வாங்கிகொள்ளலாம். கேலக்ஸி எம், எஸ் மற்றும் இசட் சீரிஸ் ஸ்மார்ட் போன்களுக்கு 57 % வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த விற்பனையில் கேலக்ஸி இசட்சீரிஸ் ஸ்மார்ட் போன்களை வாங்கும் போது, ரூபாய்.5199-க்கு வரும் வயர்லெஸ் சார்ஜர் டியோவை ரூபாய்.499க்கு வாங்க முடியும். அதேசமயத்தில் கேலக்ஸி எஸ் சீரிஸ் மற்றும் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட் போன்களை வாங்கும் போது போன் கவரில் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. கேலக்ஸி எப் சீரிஸ் ஸ்மார்ட் போனின் ஆரம்பவிலை ரூபாய்.10,999 ஆக வைக்கப்பட்டு உள்ளது.
அதேசமயத்தில் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் ரூபாய்.10,499 முதல் துவங்குகின்றன. இந்த ஆன்லைன் விற்பனையில் கேலக்ஸி S20 FE5G ஸ்மார்ட் போன் முதல் முறையாக ரூபாய்.26,999 என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. நீங்கள் விரும்பினால் EMI-யிலும் வாங்கலாம். ஸ்மார்ட் போன்கள் மட்டுமல்லாது சாம்சங்கின் எல்இடி டிவியை வாங்கினால் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட் போன் இலவசமாக கிடைக்கும். UHD ஸ்மார்ட் டிவிகளில் நிறுவனமானது நல்ல சலுகைகளை வழங்குகிறது. நீங்கள் Crystal 4K UHD Smart TV AUE60-ஐ 45 சதவீதம் தள்ளுபடியுடன் வாங்கலாம்.