Categories
உலக செய்திகள்

இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

லண்டன் – ஹீத்ரோ விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Icelandair மற்றும் Koreanair விமானத்திற்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் அவசர சேவைகள் சம்பவ இடத்தில் உள்ளன. புதன்கிழமை இரவு 8.06 மணிக்கு ஹீத்ரோ விமான நிலையத்தில் இந்த சிறிய விபத்து நடந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த விபத்தில், பயணிகள் யாருக்கும் காயங்கள் எதுவும் பதிவாகவில்லை. மேலும் விமானங்களில் வருகை அல்லது புறப்பாடுகளில் குறிப்பிடத்தக்க தாக்கம் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை.

ஆனால் பயணிகள் தங்கள் விமானங்களின் நிலையை தங்கள் விமான நிறுவனங்களுடன் சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரியன் ஏர் விமானம் KE908 லண்டன் ஹீத்ரோவிலிருந்து இரவு 7.35 மணிக்கு சியோலுக்குச் செல்ல இருந்தது. அப்போது விமானம் நகர்த்தப்பட்டபோது ஐஸ்லாண்டேர் 767 ஜெட் விமானத்தில் விமானத்தின் பின்புற வால் பகுதியில் உரசியதாகவும், இது முழுமையான மோதல் அல்ல என்று நேரில் கண்ட சாட்சி ஒருவர் கூறியுள்ளார். மேலும் ஐஸ்லாண்டேயரின் வால் பகுதியில் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியதைக் காட்டும் ஒரு வீடியோ வெளியானது.

Categories

Tech |