மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். மேலும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, மருத்துவத் தேர்வு குழு செயல் டாக்டர் .முத்துச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அவர் மருத்துவ தரவரிசை பட்டியலை வெளியிட்டார். மேலும் அவர் செய்தியாளர்களை சந்தித்து அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில் எம்.டி, எம்.எஸ். படிப்புகளுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் 1,162 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 163 இடங்களும், பல் மருத்துவத்துக்கான எம்டிஎஸ் படிப்புக்கு அரசு கல்லூரிகளில் 31 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 296 இடங்களும் உள்ளது.
மேலும் தேசிய வாரிய பட்டப்படிப்பான டிஎன்பிக்கு 94 இடங்கள் உள்பட முதுநிலை பாதுகாப்பு படிப்புகளுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 346 இடங்கள் உள்ளது. ஆனால் 11,178 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கான விண்ணப்ப அவகாசம் அக்டோபர் 3-ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை மொத்தம் 21,183 மாணவர்கள் இணைய வழியில் விண்ணப்ப பதிவு செய்தனர். அதில் 12 ஆயிரத்து 429 பேர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். தற்போது தமிழகத்தில் பருவ கால காய்ச்சல் பரவி வருகிறது.
இந்நிலையில் தமிழக முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 6 ஆயிரத்து 471 இடங்களில் காய்ச்சலுக்கான மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. மேலும் 15 ஆயிரத்து 900 பள்ளிகளில் மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலை பொருத்தவரை தற்போது 344 பேர் சிகிச்சையில் உள்ளனர். 4 ஆயிரத்து 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறியுள்ளார்