தமிழக முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரையும் காலை மற்றும் மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளி கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டு மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.
அதே சமயம் மாணவர்களுக்கு சனிக்கிழமைகள் வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்பு நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பொதுத்தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடியும் வரை காலை மற்றும் மாலை என இரண்டு வேலையும் சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பொதுவெளியில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதனால் காலாண்டு விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.