Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“போனஸ் தொகையுடன் பணம் கிடைக்கும்” நம்பி ஏமார்ந்த 22 பெண்கள்….. போலீஸ் விசாரணை….!!!!

பல லட்ச ரூபாய் பண மோசடி செய்த 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள டி.புதூரில் வசிக்கும் 22 பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்ற மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் ஊரில் வசிக்கும் 4 பேர் எங்களிடம் தனியார் நிறுவனத்தில் மாதம் 300 ரூபாய் வீதம் 5 ஆண்டுகள் 10 மாதம் கட்ட வேண்டும் என கூறியுள்ளனர். அப்படி கட்டினால் 70 மாதம் கழித்து 71-வது மாதம் போனஸ் தொகையுடன் பணத்தை திரும்ப வாங்கி கொள்ளலாம் என கூறினர். இதனை நம்பி கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் எங்கள் பகுதியில் வசிக்கும் 22 பேர் பணத்தை செலுத்தினோம்.

இதனை அடுத்து குடும்ப கஷ்டம் காரணமாக பணத்தை செலுத்த இயலாததால் ஏற்கனவே கட்டிய 18,500 ரூபாய் பணத்தை திரும்ப கேட்டோம். அவர்கள் பணத்தை திரும்ப தரவில்லை. இதே போல் 100-க்கும் மேற்பட்ட நபர்களிடம் அவர்கள் பல லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |