பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் மீடியாக்களை எச்சரிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், டிடிஎஃப்வோட பவர் தெரியாம நியூஸ் சேனல் விளையாடிகிட்டு இருக்கீங்க, அப்படின்னு கேட்க தோணுது. ஆனால் நான் கேட்க மாட்டேன். நியூஸ் சேனல் பார்த்து எனக்கு பயம் கிடையாது. உங்களுக்குன்னு ஒரு எல்லை இருக்குது. உங்களோட லிமிடிலேயே இருங்க.
என்னை பற்றி போலியான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் . உடனே டிடிஎஃப் வாசன் மிரட்டரான்னு நினைப்பீங்க, நான் மிரட்டல, பிரபல யுடியூபர்களான மதன், இர்பான் என எல்லோரையும் செஞ்சுட்டாங்க. அடுத்து நீங்களா கூட இருக்கலாம்.நான் எவ்வளவு கஷ்டப்பட்டு ஹார்ட்வேர் பண்ணி இந்த இடத்திற்கு வந்திருக்கும் என்று அவர்களுக்கே தெரியாது என அவர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.