தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது.அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த சூழலில் நடப்பு ஆண்டில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டன. அதன்படி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனிடையே தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.
வழக்கமாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் இடையில் இந்த வருடம் தாமதமாகி கொண்டிருக்கிறது.அதனால் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்திலும் குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்திலும் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.