Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

மதிய உணவுத்திட்டம்…… காங்கிரஸ்…. திமுக…. அதிமுக….. அப்ப கூட அப்படி இல்ல…. கனிமொழி வேதனை….!!

சென்னை  லயோலா கல்லூரியில் பேசிய திமுக MP கனிமொழி மதிய உணவுத்திட்டம் தனியார்மயமாக்கப்படுவதற்கு வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை லயோலா கல்லூரியில் நேற்றையதினம் நடைபெற்ற கருத்தரங்கில் திமுக எம்பி கனிமொழி கலந்துகொண்டு சகிப்புத் தன்மையில் இருந்தும், மரியாதையில் இருந்தும் அமைதி பிறக்கிறது என்ற தலைப்பில் பேசினார். அப்போது பேசிக்கொண்டிருந்த அவர் தனியார்மயமாதல் குறித்து கருத்து ஒன்றைத் தெரிவித்தார். அதில் தற்போது மத்தியில் இருக்கும் அரசு ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறைகளை தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது. அந்தவகையில்,

தற்போது தமிழகத்தில் மதிய உணவுத் திட்டமும் தனியாருக்கு மாற்றப்படுவது கண்டிக்கத்தக்கது என்றார். மதிய உணவுத் திட்டமானது உணவு இல்லை என்பதற்காக மாணவர்கள் படிப்பை விட்டு விடக் கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்ட ஒரு அருமையான திட்டம் இன்னும் பெருமையாக சொல்ல வேண்டுமென்றால், தமிழகத்தில் மாற்று சிந்தனை உடையவர்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்த போதிலும் மதிய உணவு திட்டத்தை ஒருபோதும் கைவிட்டதில்லை. ஆனால் இப்போது அதுவும் தனியார் மயமாக்கப்பட்டது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்தார்.

Categories

Tech |