ஓசியில் போக மாட்டேன் என்று சொல்லி மூதாட்டி பேசிய வீடியோ வைரல் ஆன விவகாரத்தில் அதிமுக தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள் அதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்று திமுக விளக்கம் அளித்துள்ளது.
இன்று காலை முதலே சமூக வலைதளங்களில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க கூடிய அரசு பேருந்தில் பாட்டி ஒருவர் இலவச பயணம் மேற்கொள்ள மாட்டேன் என வலுக்கட்டாயமாக பணத்தை கொடுத்து பயணம் செய்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த வீடியோ தொடர்ந்து வைரலானது அடுத்து இந்த வீடியோவானது தொடர்ந்து அதிமுகவின் உடைய ஐடி விங்கை சேர்ந்த பிரித்திவிராஜ் ரங்கசாமி என்பவர் தான் பரப்பினார் என்று திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள் அவர்களுடைய சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
கோவை மதுக்கரையில் குறிப்பாக இன்று காலை 9: 30 மணியளவில் அரசு பேருந்தில் துளசியம்மாள் என்ற பாட்டி பயணம் செய்தார். அவர் ஓசியில் வர மாட்டேன் என்றும், காசு செலுத்தி தான் நான் பயணம் செய்வேன் எனவும், நடத்துனரிடம் வலுக் கட்டாயமாக பணத்தை கொடுத்து டிக்கெட்டையும் பெற்றுள்ளார்.. அந்த டிக்கெட்டுக்கு போக மீதமுள்ள ரூ 15ஐயும் துளசியம்மாளிடம் வழங்கியிருப்பார் நடத்துனர்.. அந்த வீடியோ காலை முதல் வைரலானது.
இந்த வீடியோவை மதுக்கரை மாத்தூர் பகுதியை சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் தான் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற விதத்தில் துளசியம்மாள் பாட்டியை தூண்டிவிட்டு டிக்கெட் எடுக்க சொல்லி, அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதாகவும், திமுகவின் ஐடிவிங் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, அதிமுகவின் உடைய ஐடி விங்கை சேர்ந்த பிரித்திவிராஜ் ரங்கசாமி என்பவர் தான் தூண்டிவிட்டு பரப்பியதாக குற்றம் சாட்டியுள்ளனர்..
சில தினங்களுக்கு முன்னதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஒரு பொதுக்கூட்டத்தில் ஓசி பஸ்ஸில் பயணம் செல்கிறீர்கள் என்று மக்களிடம் பேசியிருந்தார். இவரது இந்த பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓசியில் நான் வரமாட்டேன்…
காசு வாங்கிட்டு டிக்கெட் கொடு என நடத்துனரிடம் வாக்குவாதம் செய்யும் தன்மானம் உள்ள மூதாட்டி…
கோவை மாவட்டம் மதுக்கரை… pic.twitter.com/uWKVNM0qTO
— Praveen Kumar G.L (@praveen_kgl) September 29, 2022