Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் படத்தை ஆன்லைனில் வெளியிட தடை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்த திரைப்படத்தில் இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி உள்ளது.

இந்த திரைப்படம் நாளைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியிடக்கூடாது என்று லைகா நிறுவணம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 20,045 க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பொன்னியின் செல்வன் படம் வெளியிட தடை விதித்து நீதிபதி எம்.சுந்தரம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |